31 Jul 2010

நிக்காஹ்...!!!


















பிடித்த சிநேகிதி வரவில்லை என்பதற்காக,
கல்விச்சுற்றுலாக்களை தவிர்த்துவிடுகிறேன்....
ஒருநாள் பயணத்துக்கு இத்தனை யோசனை...
வாழ்கை நெடுகிலுமாய் நமக்கே நமக்காய் வரப்போகிற ஒருத்தர் என்னோடு
எல்லாவிசயங்களிலும் உடன்படுவாரா?
அடிக்கடி கோபப்படுவாரா?
எடுத்தெறிந்து பேசிவிடுவாரா?
எவ்வளவோ விசாரணைகள் ..............???
முடிவு செய்வதற்கான முக்கிய தருணம்....
சிலருக்கு முடிவுகள் சரிவந்துவிடுகிறது......
சரியென ஏற்றுக்கொண்ட முடிவுகள்
காலப்போக்கில் சிலருக்கு பிழைத்துவிடுகிறது....
எதிபார்ப்புகளுக்கு அப்பால்
இறைவனின் திட்டமிடல் இருப்பது...
எல்லோருக்கும் மறந்துவிடுகிறது...............!!!!


15 Jul 2010


தூங்கு வியாதி....


நேரம் தெரிவதில்லை..இடத்தைப்பற்றி துளியூண்டும் யோசிப்பதில்லை;
சட்டென வந்து ஒட்டிக்கொள்கிறது நித்திரை வியாதி....

வகுப்பறைகளை விடவும் மிகச்சிறந்த தூங்கும் இடங்கள் பற்றி...
நான்
யோசித்துப்பார்க்கிறேன்

'பஸ்'இல் தூங்கிவிழும் பக்கத்து இருக்கைவாசிகள் ;வகுப்பறையில் தூங்கும் வாத்திமார்களும்
சுவாரஷ்யத்திற்குரியவர்கள்
பரீட்சை நெருங்க நெருங்க நெருக்கமாகும் தூக்க வியாதி....

இரவிரவாய்
படித்துவிட்டு
பரீட்சை மண்டபத்தில்
தூங்கிவழியும்
கன்றாவித்தனங்கள்
என்னிடத்திலும் நிறைய உண்டு....

பல்கலைக்கழக 'பிரக்டிகல் ' வகுப்புகள் ,பகல் உணவுக்குப் பிறகு
நித்திரை மயக்கத்தில் தொடரும்....
அந்தக் கொடுமையான தூக்கக்கடனை
நிறைவு செய்ய என .....
பல்கலைக்கழக படிப்பு முடிந்த கையோடு நான் முதன் முதலாக பார்த்த வேலை
சாப்பிட்டு விட்டு ,தூங்கோ தூங்கென்று .......தூங்கி முடிப்பதுதான்
ஊரிடிந்துவிழுந்தாலும் விளங்காத தூக்கம்
.......................................................................
வேலைக்குப் போன கையோடு
பகல் தூக்கத்துக்கு பெரிய ஆப்பு.....!!!!

ஒரு புத்தகத்தை
விரித்துப்போட்டபடி........
அல்லது
தொலைபேசி அழைப்பின் சுவாரசியங்களுக்கு நடுவிலும்
நான் தூங்கி வழிந்து கொண்டிருப்பேன் ......................









...

12 Jul 2010

























எங்களின் தேசம்....


வயது வரும் முன்னமே
வயசுக்கு வந்து விடுகின்றன
பெண் பிள்ளைகள்....

''ப்ரோய்ளர்'' கோழிகள்
அந்தக் கைங்கரியத்தை
சிம்பிளாய்
செய்துவிட்டு செத்துவிடுகின்றன

பத்து வயதாகும்
முன்னமே
முக்கால்வாசி சந்தோசங்களை
பெட்டிகட்டி வைத்துவிட்டு ...........
வீட்டு மூலைக்குள்
வந்து அமரவேண்டி நேர்ந்து விடுகிறது....

நெருப்பைக்கட்டிகொண்டு
வெளியில் அனுப்பிவிட்டு...
வரும் வரைக்கும்
பெற்ற வயிறு..
எரிந்து கொண்டே கிடக்கிறது....

சயிக்கிளில் ஊர் சுற்றும்
சந்தோசங்கள்
சட்டென்று
பிடுங்கப்பட்டு
குனிந்த தலை நிமிராமல்
நடக்கும் பக்குவம்
படாரென்று வந்து ஒட்டிக்கொள்கிறது....

என்ன புதினமான வாழ்க்கை
பாருங்களேன்.......













எதையாவது
எழுதிக்கொண்டும்
வாசித்துக்கொண்டும்
வாழப்பிரியப்படும்
எனது பக்கங்களில்.....
பெரிதாய் எதையும்
எழுதிக் கிழிக்க வரவில்லை......
பிடித்திருந்தால்
நேரம் எடுத்து வாசியுங்கள்..............
இல்லையா?
.........................................
திரும்பியும் பாராமல் ஆக்கபூர்வமான
எழுத்துக்களை நோக்கி
உங்கள் பார்வைகளை
திசைதிருப்பிவிடுங்கள்

என்றென்றும் அன்புடன்



saarun