
சிலரோடு மனம் திறந்து பேசமுடிகிறது....
நெருக்கமானவர்களான போதும் சிலரோடு எதையும்   பேச முடிவதில்லை........ 
ஆள் அரவமில்லா கடற்கரை மணல் மீது அமர்ந்து....
ஹோ...வென்று கத்தவேண்டும் போல ஒரு வலி ;
மனசைக் குடைந்துகொண்டே இருக்கிறது.... 
ஒரு சின்ன வார்த்தையில் .....
மனசு சுக்கு நூறாய் உடையும்
துயரம்  தெரியாமல் 
சிலர் பேசிவிடுகிறார்கள்.....
ஒரு தூசியைப்போல.....
எதையும் சுலபமாய் 
தட்டிவிட்டு நடக்கும் தைரியம் எனக்குள் இருந்தது....
என்ன ஸ்பெஷல் ?
ஸ்பெஷல் எதுவும் இல்லையா?
என்று படிக்கிற காலங்களில் என்னைக் குடைந்த  ஒரு கூட்டம்
தெரிந்தோ தெரியாமலோ என்னை சுற்றி இருந்தது.....
''என்ன மகளுக்கு ஒண்டும் பாக்கலியா?
என்ன இப்படியே வச்சிருக்கிற ஐடியாவோ ?''
என்னமோ அவர்கள் தான் என்னை தலையில் சுமப்பதைபோல அவர்களின் விசாரணைகள்....
தெரிந்தவர்கள் எல்லாம் 
உம்மாவையும் வாப்பாவையும் வார்த்தைகளால் 
நசுக்கிய காலம்.....
படிப்பு முடிந்த கையோடு....
வீட்டிலிருக்கும் நிம்மதியை அந்த விசாரணைகள் 
தொலைத்தன....
திருமணப் பேச்சுக்கள் முடிந்திருந்தது.....
இரு வீட்டிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக
இரண்டு வருடங்களுக்கு மேலாக  காத்திருக்க வேண்டி ஆகிற்று.....
''என்ன எப்ப திருமணம் ?
எப்ப விசேஷம்?
என்ன ஒரு ஸ்பெஷல்லும் காணல்ல?''
வேலைக்குப்போன இடத்தில் ஒரே காதுகுடைச்சல்..
''இப்படி பிந்தினா எப்படி....
வேற இடத்த பாக்கலாமே?''
வலிய வந்து அவர்கள் தந்த அட்வைஸ்....
நாங்கள் என்ன இவர்களைக் கேட்டமா ?
ஒரு வார்த்தை !!
ஒரு ஆறுதல் வார்த்தை தான் அப்போதைக்கு தேவையாக இருந்தது...
அது யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை .......................
நண்பிகளின் 
உறவுக்காரர்களின் திருமணங்களுக்கு 
தலைகாட்ட முடியாது...........
எல்லோரின் விசாரணையும் அது ஒன்றாகத்தான் இருந்தது...
ஏன் என்று எனக்கு தெரியவில்லை ????????????
திருமணம் மட்டுமே வாழ்கை என்று 
முட்டாள் தனமாய் எல்லோரும் சிந்திக்கிறார்கள் , 
திருமணம் நடந்தது ..............
விசேஷக்காரர்களின்
விசாரிப்புகளுக்கெல்லாம் 
பதில்  சொன்ன இறுமாப்போடு நான் இருந்தேன்....
அவர்களின் வாயை அடைத்து விட்ட 
சந்தோஷத்தில் நானிருந்தேன்.....
அடுத்த விசேஷம் பற்றி
அதிகம் அலட்டாமல்
..............................................
...........................................
..............................................
ஒரு மாதம் ஓடித்தொலைந்த  போது
அடுத்த அடி.................
மிகப்பெரிய அடி......
மறுபடியும்;
''என்ன ஒரு ஸ்பெஷல்லும் காணல்ல?''  
''என்ன ஒரு ஸ்பெஷல்லும் காணல்ல?''  
''என்ன ஒரு ஸ்பெஷல்லும் காணல்ல?''  
நான் உடைந்து ஊத்துண்டு தான் போனேன்....
எண்ணி பத்தே மாசத்தில்  குழந்தையோடு இருக்க வேண்டும் என்பது....
எலோரினதும் எதிர்பார்பாக  இருந்தது..... 
ஒருவருடத்திற்கு   மேலாகியும் 
அந்த விசேஷத்தை அறிவித்து 
வாயடைக்க முடியாமல் 
நான் .....................
காணும் இடமெல்லாம் 
இதே விசாரணை....
''இப்ப வேணாஎண்டு இருக்காகலாக்கும்....
பிந்தினா நல்லமில்ல ..........
என்ன இப்படியே இரிக்கிற ஐடியாவோ?''
மறுபடியும் அதே பல்லவி....
நண்பிகளின்; 
உறவுக்காரர்களின்;
பிறந்த குழந்தைகளை  பார்க்க விரும்புவதில்லை நான்
எல்லோரின் விசாரிப்பும் அது ஒன்றுதான் 
 அவர்கள் கேலியாகப் பேசும்   வார்த்தைகள் 
மனசை கிழித்து விடுவதை அறியாமலே; 
பேசிக்கொண்டிருக்கிறார்கள்.....
இவர்களின் விசாரிப்புக்கு என்னிடம்
எந்தப்பதிலும் இல்லை
அழுவதைததவிர .  
ஆழ்ந்த கவலையோடு என்னிடத்தில்
துருவித்துருவி விசாரணை நடத்துகிறார்கள்.....
............................
எனக்குள் இருக்கிற துயரங்களையும் 
வலிகளையும் வாசிக்கமுடியாமல்....  
நான் தனித்திருக்கவே பிரியப்படுகிறேன்.....
''ஸ்பெஷல் எதுவும் இல்லையா?''
''ஸ்பெஷல் எதுவும் இல்லையா?''
''ஸ்பெஷல் எதுவும் இல்லையா?''
''ஸ்பெஷல் எதுவும் இல்லையா?''என எனக்குப் பிடிக்காத இந்த வார்த்தை ஒலிக்காத தேசத்தில்.....     

'''.............இறைவனின் நாட்ட மின்றி மரத்திலிருந்து ஒரு இலை கூட உதிர்வதில்லை...........................'''
 நான் இறைவனை நம்புகிறேன்....!!!!